சேலம் : சேலம் மாவட்டம், கடந்த (16.10.2022) -ம் தேதி சாந்தாஜி ஜகத்தலே என்பவர் தனது மூன்று நண்பர்களுடன் ராய்ப்பூருக்கு காரில் சென்று சுமார் 127 கிலோ வெள்ளியை கொள்முதல் செய்து கொண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலைய எல்லை ஆர்.சி செட்டிப்பட்டி அருகே வரும் பொழுது அடையாளம் தெரியாத நான்கு பேர் காரை வழிமறித்து சாந்தாஜி ஜகத்தலேவையும் காருடன் சேர்த்து வெள்ளி பொருட்களையும் கடத்திக் கொண்டு அவருடைய மூன்று நண்பர்களையும் அங்கேயே இறக்கிவிட்டு சென்றனர். சாந்தாஜி ஜகத்தலேவை சங்ககிரி அருகே இறக்கி விட்டு கார் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஓமலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் 16 நபர்களை கைது செய்தனர். மேலும் இது போன்று பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த கோடாளி ஜெயன்,டைட்டஸ், சந்தோஷ் மற்றும் விபுள் ஆகியோர்களை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ 69.4 லட்சம் மதிப்பிலான 127 கிலோ வெள்ளிப் பொருட்கள்,கார் மற்றும் செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். மேற்கண்ட வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை மேற்கு மண்டல காவல்துறை தலைவர், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதிகளை வழங்கினார்கள்.