கோவை : கோவை மாநகர சி2 பந்தய சாலை காவல் நிலைய குற்ற எண் 25/2019 u/s 174 (3) CrPc @ 498 (A) & 306 IPC வழக்கில் குற்றவாளி கணேஷ்குமார்(38), க.எண். 10 ஆடிஸ் வீதி கோவை என்பவர் மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரணை செய்த கோவை மகிலா கோர்ட் நீதிபதி திருமதி.நந்தினி தேவி அவர்கள், இவ்வழக்கில் குற்றவாளி கணேஷ்குமார் குற்றவாளி என்றும் குற்றவாளிக்கு பிரிவு 498A – ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 500/- அபராதமும் மற்றும் பிரிவு 306 இன் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 500/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திருமதி. ஜிஷா அவர்கள், திறம்பட செயல்பட்டு குற்றவாளி மீதான குற்றச்சாட்டு நிறுபணம் ஆவதை உறுதி செய்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்