கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வ நாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளை விரைந்து கண்டு பிடிக்கும் பொருட்டு உதவி ஆய்வாளர்கள் திரு. உதயச்சந்திரன், பாண்டியராஜ், தலைமைக் காவலர் மகாராஜன் (HC 1390) மற்றும் முதல்நிலைக் காவலர் முத்துக்கருப்பன்(Gr 1 2004) ஆகியோர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டது.
இத்தனிப் படைக்குழுவினர் துரிதமான முறையில் விரைந்து செயல்பட்டு கிருஷ்ணாபுரம் மற்றும் சோமனூர் பகுதியில் கடந்த 01.11.2021-ம் தேதி வீடு புகுந்து கொள்ளையடித்து மற்றும் அதே பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற வழக்கின் எதிரியான முபாரக் அலி (வயது 29) கைது செய்தும், அவரிடமிருந்து 10 பவுன் தங்க நகை, லேப்டாப்-1, கேமரா-1 மற்றும் ஐ பேட்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்