திருச்சி : திருச்சி மாவட்ட முசிறி பகுதியில் இரவில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜியாஉல்ஹக் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அவர்கள் உத்தரவுப்படி முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார் அவர்களின் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் திரு. பால்ராஜ், திரு. லோகநாதன், தலைமை காவலர்கள் திரு. அன்புசெல்வன், திரு. எடிசன், திரு. ராஜ்குமார், திரு. ஆனந்த், ஆகியோர் இணைந்து முசிறி நகரில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்
இதில் தொட்டியம் பகுதியை சேர்ந்த சரன்ராஜ், மதுரையை சேர்ந்த சூர்யா, நாமக்கல் பகுதியை சேர்ந்த சங்கர், வெள்ளையன் மற்றும் சில நபர்களை பிடித்து காவலர்கள் விசாரித்தனர்.விசாரணையில் கடந்த 28.06.2019 ந் தேதி கொளக்குடி பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில் இரவு பூட்டை உடைத்து மது பாட்டில்களை கடத்தியது, தலைமலை பகுதி மற்றும் தாத்தையங்கார் பேட்டையில் இரு சக்கர வாகனம் திருடியது போன்ற பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர்.
மேற்படி நபர்களை கைது செய்த காவலர்கள் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய OMNI VAN மது பாட்டில்கள், நான்கு இருசக்கர வாகனம் உட்பட கைப்பற்றினர்.
துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை (11.12.2019) அன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாஉல்ஹக் அவர்கள் துரிதமாக செயல்பட்ட முசிறி காவலர்களை நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பா.மோகன்
முசிறி