திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் தியாகராஜநகரை சேர்ந்த தனலட்சுமி (65), என்பவர் சிவந்திபட்டியிலிருந்து வண்ணாரப்பேட்டை வந்த அரசு பேருந்தில், கைப்பையை காணவில்லை என பாளையம்கோட்டை பேருந்து நிலையத்தில், இறங்கிய முதியவர் (29-07-2022) ம் தேதியன்று, பாளை பேருந்து நிலையம் அருகே பள்ளி ரோந்து பணியிலிருந்த பாளை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர்கள் திருமதி.அனுராதா, அவர்கள் WHC 589 மற்றும் திருமதி.சாந்தி, அவர்கள் WHC 648 ஆகியோரிடம் தகவல் கொடுத்தனர்.
அவர்கள் அந்த வழித்தடத்தில், சென்ற பேருந்து விபரங்களை பெற்று போக்குவரத்து அதிகாரிகளிடம் பேருந்து மற்றும் ஓட்டுனர் ஆகியோரின் பெயர் மற்றும் கைபேசி எண்களை பெற்று தொடர்பு கொண்டு தவறவிட்ட பையிலிருந்த சுமார் 8 சவரன் எடையுடைய தங்க நகைகள் மற்றும் ரூ 900/- பணம் ஆகியவற்றை பெண் தலைமை காவலர்கள் திருமதி.அனுராதா அவர்கள் WHC 589 மற்றும் திருமதி.சாந்தி அவர்கள் WHC 648 உரியவரிடம் நல்ல முறையில் ஒப்படைத்தார்கள். கைப்பையை பெற்று கொண்ட முதியவர் காவல் துறையினருக்கும் பேருந்து ஓட்டுனர் திரு.இசக்கி அவர்கள் மற்றும் பேருந்து நடத்துனர் திரு.வைத்தியலிங்கம், அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.