பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசும்பலூர் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக திருசடை (27) க/பெ வெங்கடேசன் பசும்பலூர். என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவரது 7 வயது சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவத்தை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பதிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்தாஸ், மங்களமேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கலா, வி.களத்தூர், காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
என்றும் காவல்துறை செய்திகளுக்காக போலீஸ் நியூஸ் பிளஸ்.















