பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் திரு.ப.குணசீலன் மற்றும் திரு.இரா.கதிரவன் ஆகிய இருவரும் தங்களது சொந்த செலவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் ஆகியவற்றை வாங்கி அதனை இன்று 12.06.2020 ம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பராமன், மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.சங்கீதா ஆகியோர் தலைமையில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்கள். மேற்படி பொருட்களை பெற்ற துப்புரவு பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினருக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.