சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கீழச்செவல்பட்டி அருகே உள்ள மாங்கொம்பு கிராமத்தை சேர்ந்த நாச்சியப்பன் என்பவர் தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக 25.05.2020 அன்று போலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி சட்டத்திற்குப் புறம்பாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நாச்சியப்பன், வெள்ளைச்சாமி, ஆறுமுகம் ஆகிய 3 நபர்கள் மீது u/s.27(1) Indian Arms Act – 1959 – ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை