கோவை: கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து பார்சல் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அனுப்புவதற்கு சேலத்தில் இருந்து ஒரு பார்சல் வந்தது .அந்த பார்சல் மீது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள் அதை பிரித்து பார்த்த போது அதில் கைதுப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதுகுறித்து இதை அனுப்பிய சேலம் விநாயக பட்டியை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் பொம்மை துப்பாக்கி என்றும் பழுது பார்ப்பதற்காக உத்தரபிரதேச மாநிலத்துக்கு பார்சல் மூலம் அனுப்பியதாகவும் விளக்கம் அளித்தார்.
இது குறித்துவிமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் டாக்டர் சாமுவேல்ஸ்டீபன் மீது விமான நிலைய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.