திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே வீட்டில் கள்ளத்துப்பாக்கி மற்றும் பேரல்கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளத்துப்பாக்கி சிக்கியது. இதை சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் சாங் வெட்டி மேட்டு குடியை சேர்ந்த பூசாரி பொன்னுச்சாமி 40 போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மற்றும் சாணார்பட்டி பகுதியில் தொடர்ந்து கள்ள துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. லைசென்ஸ் இல்லாமல் பலர் துப்பாக்கிகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா