திருச்சி : திருச்சி மாநகரம் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில், வெற்றி பெற்றவர்களுக்கு (31.07.2022),-தேதி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் திரு.S.R.ஜாங்கிட், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க இணை செயலாளர் திரு.Dr.D.V.சீத்தாராமராவ், அவர்கள், ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
இப்போட்டியில், வெற்றிபெற்ற 192 நபர்களுக்கு தங்கம் பதக்கமும், 180 நபர்களுக்கு வெள்ளி பதக்கமும்,165 நபர்களுக்கு வெண்கலம் பதக்கமும், ஆக மொத்தம் 537, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதில் சிறப்பம்சமாக திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், 0.22 ரைபிள் 50 மீட்டரிலும், 10 மீட்டர் ஏர் ரைபிளிலும் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார். திருச்சிமாநகர காவல் ஆணையர் அவர்களை ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் அவர்கள் மற்றும் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.