தருமபுரி: மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை/பள்ளி பயிற்சி மையம்/துப்பாக்கி சுடு தளத்தில் (24.07.2025) முதல் (26.07.2025) வரை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் மேற்கு மண்டல காவல்துறை சார்பில் கலந்துகொண்ட தருமபுரி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த முதல் நிலை பெண் காவலர் திருமதி. குமுதா அவர்கள் 100 yards standing position – பிரிவில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்தார். இவரை பாராட்டி காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் பதக்கம் , சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.com.BL., அவர்கள் பெண் காவலர் திருமதி. குமுதாவை நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்து வெகுமதி வழங்க ஆவண செய்தார்.