இராணிப்பேட்டை: தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள், இராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணில் காவல் வீரர்களின் உயர்ந்த தியாகத்தை நினைவுகூர்ந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், துப்பாக்கி கண்காட்சியை பார்வையிட்டார். இதையொட்டி காவலர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றோருக்கு பணப்பரிசுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் காவலர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.