ஈரோடு: ஈரோடு மாவட்டம் சின்ன மலை அடிவாரத்தில் சென்னம்பட்டி வனத்துறையினர் ரோந்து பணி சென்றனர். அப்போது சந்தேக படும்படி நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்த போது,மேட்டூர் தாலுகா லக்கம்பட்டியை சேர்ந்த மாதேசன் 50 என்பதும், மான் வேட்டையாட வந்ததாகவும்,தேக்கு கட்டைகளை வெட்டி பதுக்கி வைத்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாதேசனை வனத்துறையினர் கைது செய்து,ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.மேலும் அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கி, தேக்கு கட்டைகள், மான்கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.