இராமநாதபுரம்: தமிழ்நாடு காவல்துறை சார்பாக மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 05.01.2022-ஆம் தேதி முதல் 08.01.2022-ஆம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது.
இதில் துப்பாக்கிசுடும் போட்டியில் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து, இராமேஸ்வரம் உட்கோட்டம், இராமேஸ்வரம் கோவில் காவல் நிலைய பெண் தலைமை காவலர்-1812 திருமதி.ஜுனிதா மற்றும் கீழக்கரை உட்கோட்டம், ஏர்வாடி தர்ஹா காவல் நிலைய பெண் முதல்நிலை காவலர்-1278 திருமதி.இராமலெட்சுமி ஆகிய இருவரும் கலந்து கொண்டு ரைபிள் பிரிவில் முறையே 300 யார்டு மற்றும் 100 யார்டு பிரிவில் முதல் இடத்தை பிடித்து கேடயம் வென்றுள்ளதோடு மட்டுமல்லாமல், ரைபிள் பிரிவில் தென்மண்டல காவல் அணி முதல் இடமும், ஒட்டுமொத்தமாக இரண்டாமிடமும் பிடித்து வெற்றிபெற முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
மேற்படி துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு கேடயம் வென்று, அடுத்த கட்டமாக தேசிய அளவில் நடைபெற உள்ள துப்பாக்கிச்சுடும் போட்டிக்குத் தேர்வாகி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பெண்
தலைமை காவலர் 1812 திருமதி.ஜுனிதா மற்றும் பெண் முதல்நிலை காவலர் 1278
திருமதி.இராமலெட்சுமி ஆகிய இருவரையும் ஊக்குவிக்கும் விதமாக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் பரிசளித்து வெகுவாக பாராட்டினார்கள்.
இராமநாதபும் மாவட்ட காவல்துறை