திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் முற்றிலும் தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,IPS. அவர்களின் அறிவுரையின் படி பல்வேறு கட்டமாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் உவரி காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி அவர்கள் தலைமையில் காவல்துறையினர்
உவரி கடற்கரைப் கிராம பகுதிகளுக்கு சென்று, பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, தங்களையும் தங்களது குடும்பத்தையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது போன்ற வழிமுறைகளையும் எடுத்துக்கூறி, அடிக்கடி வெளியே சுற்றாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இலவச முகக் கவசங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய உவரி காவல் நிலைய காவல் துறையினரின் செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.