திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் சில நாட்களுக்கு முன்பு கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்த இரகசிய தகவல்களை பொதுமக்கள் மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்க 9159 616263 என்ற எண்ணை அறிமுகம் செய்தார். மேலும் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், சமூக வலைதளங்களிலும், காவல் நிலைய காவலர்கள் மூலமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இது குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
மேலும் ஒரு முயற்சியாக (07.09.2022) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் இணைந்து திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளிக்கக்கூடிய 9159616263 என்ற எண் கொண்ட துண்டு பிரசுரங்களை பொது மக்களிடையே வழங்கியும், வாகனங்களில் ஒட்டியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்