இராணிப்பேட்டை : (25.10.2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். உடன் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு திருமால் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தார்கள்.