கோவை : கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி கோத்தாரி நகர் பகுதியைச் சேர்ந்த 61 வயது நபர் ஒருவருக்கு கொரானா அறிகுறி இருப்பதை அறிந்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 13) வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் சென்று வந்த துடியலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவருடன் நெருங்கி இருந்த உறவினர்கள் என 32 பேருக்கு நேற்று கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரானா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்ட துடியலூர் மருத்துவபணியாளர்கள் மற்றும் துடியலூர் காவலர்கள் 72 பேரின் சோதனை முடிவுகள் வந்துள்ளன. இதில் அனைவருக்குமே கொரானா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்