விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தீயணைப்பு துறை சார்பாக மக்கள் அதிகம் கூடும் இடமான விழுப்புரம் மகாலட்சுமி பிளாசாவில் மாவட்ட ஆட்சியர் திரு.மோகன், I.A.S., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஶ்ரீநாதா I.P.S, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி திரு.ராபின் கேஸ்ட்ரோ ஆகியோர்களின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கத்துடன் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அத்தீயை அணைப்பது, சமையல் எரிவாயுவை தீபிடித்துவிட்டால் எவ்வாறு அணைப்பது மற்றும் தீ விபத்து போன்ற இடர்பாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.