பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட காவல்துறை சார்பாக சாலையில் ஏற்படும் பிரச்சனைகளை கண்காணிக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 01.08.2021-ம் தேதி மதியம் சுமார் 02.00 மணியளவில் ரோந்து பணியில் இருக்கும்போது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் இரூர் – காரை பிரிவு ரோட்டில் சாலை விபத்து ஏற்பட்டத்தை கண்ட காவல்துறையினர் அருகில் செல்லும்போது இரு சக்கர வாகனமும் காரும் மோதிக் கொண்டதில் தீடீரென தீப்பிடித்து காரும் இரு சக்கர வாகனமும் எரியத்தொடங்கியது.
இதனை கண்ட காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகள் மற்றும் ஆண் நபர் ஒருவரை மீட்டனர். அவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்ததை கண்ட உதவி ஆய்வாளர் காயம்பட்ட நபர்களை ரோந்து வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறி அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரண்டு குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றினார்கள்.
மேற்படி விபத்தில் வாகங்கள் தீப்பிடித்து எரிவதை கண்டு அஞ்சாமல் விபத்தில் சிக்கிய நபர்களை மீட்ட நெடுஞ்சாலை ரோந்து எண்-2 காவல்துறையினரான திரு.நடராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர், மற்றும் காவலர்கள் திரு.சுரோஷ்குமார், திரு.மணி மற்றும் திரு.திலிப்குமார் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை