பெரம்பலூர்: காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி தமிழகத்தில் பரவி வரும் கொரோனா மூன்றாம் அலை காரணமாக இன்று 05.01.2022-ம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பொது மக்களிடம் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று காவல்துறை சார்பாக கேட்டுக் கொண்டார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சஞ்சீவ்குமார், அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலசுப்ரமணியன், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுப்பையன், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி. அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் கடைவீதிகள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கிராம பகுதிகளுக்கு சென்று ஒமைக்ரான் வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும்,
கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்றும், பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் முக்கியதுவத்தை எடுத்துக் கூறியும், இலவச முகக்கவசங்கள் வழங்கி வருகின்றனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை