மதுரை : மதுரை மாநகரில், கஞ்சா விற்பனையினை தடுக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கையின் பேரில் தொடர் வாகன தணிக்கை நடைபெற்று வருகின்றன, அதன் அடிப்படையில் (11.03.2023)-ம் தேதி பகல் 14.45 மணியளவில் E2 மதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைகை வடகரை ரோடு ஆசாரி தோப்பு சந்திப்பில் சார்பு ஆய்வாளர் திரு.வைரக்குமார், மற்றும் காவல் ஆளிநர்கள் இரகசிய தகவலின் பேரில் வாகன தணிக்கை செய்த போது அந்த வழியாக வந்த சொகுசு காரின் TN 39 AV 8181 –Ford Endeavour பின்பக்க டிக்கியினை திறந்து சோதனை செய்த போது அதிலிருந்த 43 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், மேற்படி காரினை ஒட்டி வந்த கார்த்தி (33/2023) த/பெ. முருகானந்தம், (79), முருகபவனம், இந்திரா நகர், பழனி ரோடு, திண்டுக்கல் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா விற்ற பணம் ரூ.10,000/- மற்றும் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தனது நண்பர் பரமேஸ்வரன் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பென்சர் காம்பவுண்டில் உள்ள வாகன காப்பகத்தில் TN 10 A5 5395 – ISUZU என்ற சொகுசு காரில் சுமார் 45 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்ததன்பேரில் அங்கு சென்று கார் மற்றும் 45 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மொத்தம் 88 கிலோ கஞ்சாவுடன் TN 39 AV 8181 – Ford Endeavour மற்றும் TN 10 AS 5395 ISUZU மற்றும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்திய ரெட்மீ செல்போன் ஒன்று பணம் ரூ. 10,000/- ஆகியவை கைப்பற்றப்பட்டு, இ2 மதிச்சியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேற்படி வழக்கில் தலைமறைவு குற்றவாளி 2 பரமேஸ்வரனை தேடி வந்த நிலையில் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நேற்று (13.03.2023)ம் தேதி . இரவு DD4 திருப்பாலை காவல் எல்லைக்குட்பட்ட கடச்சனேந்தல் பகுதியில் சார்பு ஆய்வாளர் திரு.ஜெகதீஸ்வரன் மற்றும் காவல் ஆளிநர்கள் இரகசிய தகவலின் பேரில் வாகன தணிக்கையின்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர ஷ் வாகனத்தினை TN 65 AE 6565 – Toyota Fortuner சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 42 கிலோ கஞ்சாவையும் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும். அவ்வாகனத்தினை ஓட்டி. வந்த பரமேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் அளித்த வாக்குமூலத்தின். அடிப்படையில் மதுரை கடத்சனேந்தலில். உள்ள கார் பார்க்கிங்கில் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மேலும் மூன்று சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன. குற்றவாளி பரமேஸ்வரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பென்சர் காம்பவுண்டில் உள்ள வாகன காப்பகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு கார் TNTN 01 AS 1111 – BMW Car-ல் இருந்த 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், குற்றவாளியின் வீட்டில் கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ.4,30,000/- மற்றும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தி வந்த செல்போன்கள்-12, லேப்டாப்-1 மற்றும் டோங்கிள் மோடம்-2 ஆகியவை கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் பரமேஸ்வரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது D4 திருப்பாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு. குற்றவாளி A1-பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மதுரை மாநகரில் இதற்கு முன் 2 கஞ்சா வழக்குகளும், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் 12 திருட்டு வழக்குகளும் உள்ளன. இவ்வாறு இந்த இரண்டு வழக்குகளில் சேர்த்து மொத்தம் 160 கிலோ கஞ்சா (இதன் மதிப்பு சுமார் – 32. லட்சம்), சொகுசு கார்கள் – 7, செல்போன்கள் – 13, டோங்கிள் மோடம் – 2, லேப்டாப் – 2 மற்றும் பணம் ரூ. 4,40,000/- ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் உயர்திரு. நரேந்திரன் நாயர், இகாப., அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
திரு.விஜயராஜ்