சிவகங்கை: இன்று காலை சிங்கம்புனரி செட்டியார் குளம் பகுதியில் வாகன தணிக்கையில் சிங்கம்புணரி காவல் சார்பு ஆய்வாளர் திரு.குகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த, முகமது ஹாரிஸ் என்பவரது வாகனத்தை ஆய்வு செய்தனர். அவரது வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு சென்ற சுமார் 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 14கிலோ குட்கா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, சிங்கம்புணரி நீதித்துறை நடுவர் முன்பாக நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி