நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கு.ஜவகர்.இ.கா.ப, அவர்களின் உத்தரவின் படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் 10 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். (01.02.2023), ) முதல் (25.03.2023), வரை சோதனை சாவடிகள் வழியே புதுவைலிருந்து நாகப்பட்டினம் கடத்தி வரப்பட்ட 610 லிட்டர் பாண்டி விஷ சாராயம் மற்றும் 90 ml கொண்ட318 மது பாட்டில்கள் மற்றும்180 ml கொண்ட 199 மது பாட்டில்களும் 4 இருசக்கர வாகனங்கள்மற்றும் 1நான்கு சக்கர வாகனங்களை கைப்பற்றி இக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 12 நபர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைத்தனர்.இவ்வாறு குற்றச்சம்பவங்கள் மேன்மேலும் வளராமல் தடுக்கும் வகையில் பணியாற்றிய காவலர்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.