திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட மெதூர் பகுதியில் முறையான ரசீது இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 72,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் ஆரணியில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 1500 ரூபாய் மதிப்புள்ள 20 பரிசு தொகுப்பு பைகள் பறக்கும் படை சோதனையில் சிக்கியது. இதனை பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொன்னேரி சாராட்சியர் திரு. வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது வட்டாட்சியர் திரு. மதிவாணன், பறக்கும் படையின் அண்1பியின் சிறப்பு தனி வட்டாட்சியர் திருமதி. சித்ரா, உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன்,தலைமை காவலர் திரு. ராமு, காவலர் திரு. கமலக்கண்ணன், ஓட்டுநர் திரு. விக்னேஷ் அருகில் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு