ராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு மே பத்தாம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனை ஒட்டி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மதியம் 12 மணிவரை தமிழக அரசு நேரம் ஒதுக்கியுள்ளது. இதையொட்டி ராமேஸ்வரத்தில் 12 மணிக்கு மேல் தேவையில்லாமல் ஊர் சுற்றும் வாகனங்கள் மீது போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்களிடம் தேவையில்லாமல் ஊர்சுற்ற வேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே வர வேண்டுமென்றும் மாஸ்க் அணிந்து வெளியே வர வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை வழங்கினர்.