மதுரை : மதுரை எஸ்.எஸ் காலனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பேரரசி போலீசாருடன்
பொன்மேனி பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அவர்கள் பைபாஸ்ரோடு சென்ட்ரல்வேர்அவுஸ் அருகே அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அதில் இரண்டு கிலோ எடை வீதம் 10க்கும் மேற்பட்ட பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்தனர் அதன் மொத்த எடை 21 கிலோ இருந்தது. அந்த வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர் மதுரை அண்ணாநகர் வடக்கு குறுக்கு தெரு சேர்ந்த கிருஷ்ணகுமார் (54) என்பது தெரியவந்தது.
2003 ஆம் ஆண்டு வரை லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்த அவர் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை தடைக்குப் பிறகு 20 ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் இறங்கி
சரக்கு லாரியில் ஆந்திரா சென்று கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சில்லறையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 21கிலோ கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூ3லட்சத்து30ஆயிரத்து 620ஐயும் அவற்றை பதுக்கி வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்