தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஒரத்தநாடு போலீஸ் சரக பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூர்த்தியம்பாள்புரம் கிராமத்தில் மதுபாட்டில் விற்பனை செய்த சந்திரவள்ளி (45) என்பவரை போலீசார் பிடித்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரவள்ளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்