வேலூர் : வேலூர் மாவட்டம் (30.11.2022), பேர்ணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிராக்டரில் ஆற்று மணல் திருடியவர் கைது 1 யூனிட் ஆற்று மணல் மற்றும் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் பேரணாம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.தேவபிரசாத், தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எருக்கம் பட்டு தாபா ஹோட்டல் அருகே, இந்திரா நகர் பத்திரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த குற்றவாளிகள் சரண்ராஜ் த/பெ பரவசம் மற்றும் 2.பத்மநாபன் த/பெ கருணாகரன் என்பவர்கள் சட்ட விரோதமாக டிராக்டரில் ஆற்று மணல் திருடியது தெரியவந்தது. குற்றவாளிகள்களிடமிருந்து ஒரு யூனிட் ஆற்று மணல் மற்றும் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட ட்ராக்டரையும் பறிமுதல் செய்து குற்றவாளிகள்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் பத்மநாபன் என்பவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்