திருவாரூர் : வருடந்தோறும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகளுக்கு அரசுவிடுமுறை அறிவித்து உத்தரவிட்டு வருகிறது அதுபோல் இந்த வருடமும் இன்று (16.01.2024) -ம்தேதி உலகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அனைத்து மதுபானக்கடைகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், M.Sc., (Agri.,) மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் மற்றம் காவல் நிலைய பொறுப்புஅதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் இன்று காலை முதலே, மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிரமாக சட்ட விரோமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களையும், பொது இடங்களில் மது அருந்தியவர்களையும் பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி திருவாரூர் உட்கோட்டத்தில் சட்டவிரோதமாக மதுக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது 7 வழக்குகளும், நன்னிலம் உட்கோட்டத்தில் சட்ட விரோத மதுக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது 9 வழக்குகளும், மன்னார்குடி உட்கோட்ட காவல் சரகத்தில் சட்ட விரோத மதுக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது 11வழக்குகளும், திருத்துறைப்பூண்டி உட்கோட்டஉட்கோட்ட காவல் நிலைய சரகத்தில் சட்ட விரோதமதுக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது 11 வழக்குகளும், முத்தப்பேட்டை உட்கோட்ட காவல்சரகத்தில் சட்ட விரோத மதுக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10 வழக்குகளும், திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவில் சட்ட விரோத மதுக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது 15வழக்குகளும், சட்ட விரோத மதுக்கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர கனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
(16.01.2023)-ம் தேதி மாவட்டம் முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடி மதுவிலக்குவேட்டையில், சட்டவிரோத மதுக்குற்றங்களில் ஈடுபட்டது. தொடர்பாக 63 வழக்குகள் பதிவு செய்து, 64 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தீவிர மதுவிலக்கு வேட்டையின்போது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்து அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உழவர்திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் தொடர்பாக நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்வதால், மது அருந்திவிட்டு எவரேனும் அவர்களிடம் பிரச்சினையில் ஈடுபட நேரிடலாம் என்பதால், மது அருந்திவிட்டு போதையில் நடமாடுபவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், பொங்கல் பண்டிகை மற்றும் மதுபானக்கடை விடுமுறையை பயன்படுத்தி யாரேனும் பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri.,)* அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.