சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்டத்தில் கடந்த (22.03.23)
மற்றும் (16.04.23) ஆகிய தேதிகளில் காரைக்குடி பர்மா காலணியை சேர்ந்த காளிதாஸ் மற்றும் காந்திபுரம் 2வது தெருவை சேர்ந்த சுவாதி ஆகியோர்களின் வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் சுமார் 29 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்ததாக கொடுத்த புகாரில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை
நடைபெற்று வந்தது. காவல்துறை தென்மண்டல தலைவர் திரு.அஸ்ரா கார்க், இ.கா.ப., அவர்கள் மற்றும் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ஆ.துரை, இ.கா.ப., அவர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ், அவர்களின் உத்தரவின்பேரில் காரைக்குடி உட்கோட்டம், உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டாலின், இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில் அழகப்பாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.உதயக்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடிவந்த நிலையில் மதுரை திருமங்கலம் கின்னிமங்களத்தை சேர்ந்த பால்பாண்டி மகன் சின்னத்தம்பி (எ)லெட்சுமணன் (எ) ராஜ்குமார்(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள் 28 பவுன் மீட்கப்பட்டுள்ளது. குற்றவாளி சின்னத்தம்பி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி