மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் வீடுகளில் அடிக்கடி தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இது சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சிவபிரசாத் உத்தரவின் பேரில் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு திரு.பாலசுந்தரம், ஆலோசனையின் பேரின் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா, தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனிச்சியம் பிரிவில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். கைது மேலும் விசாரணை செய்தபோது தர்மபுரி மாவட்டம் பீடமனேரியை சேர்ந்த முகமது அலி (27) என்பதும், சமயநல்லூர் உட்கோட்ட பகுதிகளில் பல வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 17½ பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், முகமது அலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

திரு.ரவி