திருநெல்வேலி: தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 24.05.2021 ம்தேதி முதல் 30.05.2021 வரை திருநெல்வேலி மாவட்ட எல்கைகளில் 4 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டும், மாவட்டம் முழுவதும் 33 முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்யவும், மொத்தம் 1200 காவலர்களை நியமித்து ஊரடங்கு காலத்தில் உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.