விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் விழுப்புரம் காய்கறி மார்க்கெட்,MG சாலை, பாகர்ஷா விதி ஆகிய இடங்களில் உள்ள கடைகளை ஊரடங்கு காலத்தில் அரசு அறிவுறுத்தலின்படி பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியுடன் இயங்குகின்றனவா என்று ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள். விழுப்புரம் மாவட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள். அரசு அறிவுறுத்தலின்படி, ஒரு பேருந்தில் எத்தனை பேர் செல்ல வேண்டும் மற்றும் முகக்கவசம் கையுறை அணிந்து மக்கள் பாதுகாப்பாக செல்கிறார்களா என்று ஆய்வு செய்து கொரோனாவை பற்றி விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் காணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒட்டன் காடுவெட்டி கிராமத்தில் வசிக்கும் உடல் ஊனமுற்ற பெண்மணி லில்லி ரோஸ் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டதின் பேரில் காவல் கண்காணிப்பாளர் திரு.s.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்களின் உத்தரவுபடி லில்லி ரோஸ் என்பவருக்கு அரிசி மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் 25.06.2020 தேதி மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியான மடப்பட்டு நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அரசு அறிவுறுத்தலின்படி இ-பாஸ் பெற்று வாகனத்தில் செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து செல்கிறார்களா என்று சோதனை செய்தார்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் 25.06.2020 தேதி காலை விழுப்புரம் கணபதி நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டை பார்வையிட்டு அவரின் வீடு சரியான முறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்