தென்காசி : காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த நமது தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த CRPF வீரர் திரு.சந்திர சேகர் அவர்களின் உடல் நேற்று(07.05.2020) அவரின் சொந்த ஊரான செங்கோட்டை கொண்டுவரப்பட்டது..
காவல்துறை மற்றும் CRPF வீரர்களின் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஆதிதிராவிட மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் திருமதி.ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.அருண் சுந்தர் தயாளன் IAS,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS மற்றும் CRPF உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு இறுதிமரியாதை செலுத்தினர்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்