திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது .மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய டிஐஜி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து வாகனம் பறி முதலில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடை பிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் ஏற்படும். ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உட்பட பல பகுதிகளில் செயல்படுவதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒட்டன்சத்திரம் போலீசார் கெடுபிடியால் கூட்டங்கள் ஒரளவு குறைந்துள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் பைபாஸ் சாலையில் டிஎஸ்பி அசோகன் தலைமையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டிஎஸ்பி அசோகன் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை எந்த சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, என்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா