கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு P.பகலவன் IPS., அவர்களின் தலைமையில் மந்தவெளி அருகில் உள்ள கண்ணன் மஹால் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தை சேர்ந்த ஏற்கனவே மனு அளித்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட சுமார் 80 நபர்கள் கலந்து கொண்டனர், அவர்களிடம் சட்டம் ஒழுங்கு, நில அபகரிப்பு மற்றும் பணமோசடி, தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டறிந்தார் மேலும் சுமார் 21 நபர்கள் மனுக்களை மறு விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காண காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. ஜவஹர்லால், திரு. விஜய் கார்த்திக் ராஜா மற்றும் கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பாலசுப்ரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிரான குற்ற தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. திருமேணி, மதுவிலக்கு அமலாக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராவிச்சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.