விழுப்புரம்: விழுப்புரம்மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு தந்திரக் கதம்பப் படிமாற்றீட்டுப் போட்டி (TACTICAL MEDLEY RELAY COMPETITION) நடத்தப்பட்டது.
இதில் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையங்களிலிருந்தும் தலா 4 பேர் அடங்கியோர் 1 குழுவாக மொத்தம் 8 குழுவினர் பங்கேற்றனர்.
இறுதியாக விதிமுறைகளுக்குட்பட்டு, மிக துரித நேரத்தில் போட்டியை முடித்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலைய குழுவினர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற குழுவினருக்கு மாவட்ட அலுவலர் திரு.ராபின் காஸ்ட்ரோ அவர்கள் கோப்பை வழங்கி கௌரவித்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.