செங்கல்பட்டு அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் கோவில் குளத்தில் மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணா அவர்களின் உத்தரவின் பேரில் மறைமலைநகர் தீயணைப்பு மீட்பு பணி நிலைய குழுவினர்கள் வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைவெள்ளம் காலங்களில் எவ்வாறு தன்னையும் பிறரையும் காப்பாற்றிக் கொள்வது என்பதை பற்றிய செயல்முறை ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பிக்கப்பட்டது இதில் வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா மற்றும் கூடுவாஞ்சேரி பேரூராட்சி தலைவர் கார்த்திக். கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையினர்அனைவரும் கலந்துகொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்