இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையம், தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் தீயணைப்பு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு ஆகிய இடங்களை தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர்,டிஜிபி திரு. பிரஜ் கிஷோர் ரவி, இ.கா.ப அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள். இவ்வாய்வின் போது மத்திய மண்டல துணை இயக்குநர் திரு. பி. சரவணகுமார் மற்றும் இராணிப்பேட்டை தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையத்தின் முதல்வர் திருமதி. ப. ஆர்னீஷா பிரியதர்ஷினி ஆகியோர் உடன் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்