செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தீயணைப்பு காவல் நிலையத்தில், மாவட்ட அலுவலரின் உத்தரவின்படி, 77வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, நிலைய அலுவலர் திரு. கார்த்திகேயன் அவர்களின் தலைமையில், பணியாளர்கள் மற்றும் தீ தன்னார்வலர்கள் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இனிப்புகள் வழங்கப்பட்டு விழா மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தீயணைப்பு காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















