இராணிபேட்டை: இராணிபேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திருமதி.தீபா சத்தியன் இ.கா.ப. அவர்களின் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் மற்றும் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி நேற்று எடுக்கப்பட்டது.
தேசிய ஒற்றுமை நாள் உறுமிமொழி
இந்திய ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டின் மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும், உளமார உறுதியளிக்கிறேன்.
சர்தார் வல்லபாய் பட்டேல்-ன் தொலைநோக்கு பார்வையாளும் நடவடிக்கையாளும் சாத்தியப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதியை எற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
ஊழலுக்கெதிரான உறுதிமொழி
நமது நாட்டின் பொருளாதாரம் அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு குடிமக்கள் மற்றும் தனயார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையுடன் விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.
எனவே
- நான் அனைத்து செயல்களிலும், நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்.
- இலஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன் என்றும்
- அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையடன் செயல்படுத்துவேன் என்றும்
- பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும் தன்ப்பட்ட நடத்தையில நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும்
- ஊழல் தொடர்பான நிகழ்வினை உhயி அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்றும் உறுதியளிக்கிறேன் என உறுதி மொழி ஏற்கபட்டது.
இவ்வுறுதிமொழியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்துகருப்பன் (இணையவழி குற்றப்பிரிவு) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வில்வேஸ்வரய்யர் (தலைமையிடம்) காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்துக் கொண்டார்கள். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தேசிய ஒற்றுமை நாள் மற்றும் ஊழலுக்கெதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்