திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால்பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடைவீதி பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், அன்னியர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து R.F ரோடு பார்வதி துணிக்கடை, தாராபுரம் ரோடு அருகே கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடை வீதிகளுக்கு வரும் பொதுமக்களிடையே முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்லும் படி தொடர் அறிவிப்பு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
