திருவள்ளூர் : பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிதுறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்தில்லாத தீபாவளி கொண்டாட தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் உப்பளம், பொன்னேரி மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீயணைப்பு துறையினர் சென்று துண்டு பிரசுரங்கள் மூலம், பட்டாசு கொளுத்தும் போது, பருத்தி ஆடை அணிய வேண்டும், நீண்ட வத்திகளை பயன்படுத்த வேண்டும், கையில் வைத்து வெடிக்க கூடாது, குடிசை அருகில் வெடிக்க கூடாது, ராக்கெட் வெடிகளை பாட்டிலில் வைத்து வெடிக்கக் கூடாது, சட்டைப்பையில் பட்டாசுகள் வைக்கக்கூடாது, பெரியவர்கள் முன்பாக வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும் போது அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் ஏதாவது விபத்து ஏற்பட்டால் 044. 27974064 9445086164 என்ற எண்ணில் தொடர்பு தொடர்பு கொள்ளலாம் என பொன்னேரி தீயணைப்பு நிலைய ஆய்வாளர் சம்பத் தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்