திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருடர்கள் இருந்து ஜாக்கிரதையாக இருப்பது சந்தேகப்படும் படியான நபர்களைப் பற்றிய அருகிலுள்ள காவலர்களிடம் தெரிவிக்கவும், அவசர காவல் உதவிக்கு எண் 100 தொடர்பு கொள்ளவும் என ஆரணி டிஎஸ்பி(DSP) திரு.கோட்டீஸ்வரன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுத்து அறிவுரைகள் வழங்கினார்.
கார்த்திகை தீபம் விழா மிகவும் விசேஷமாக திருவண்ணாமலையில் நடந்து கொண்டு இருப்பதை ஒட்டி உயர்திரு ஆரணி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.கோட்டீஸ்வரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி, எந்த விதமான சட்ட விரோத செயல்கள் நடக்காமல் இருக்க, பெண்கள் திருடர்களிடம் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்மற்றும் தங்களது நகைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
திருடர்கள் எப்படி வேண்டுமானாலும் நகைகளை பறிக்க வரும்பொழுது, அவர்களிடமிருந்து எப்படி தங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருவதற்காக உயர்திரு ஆரணி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.கோட்டீஸ்வரன் அவர்களுக்கும் மற்றும் காவல்துறை நண்பர்களுக்கும் அங்கு வந்த பக்தர்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்