அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவரிடமிருந்து தங்க நகை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மாஞ்சக்கொள்ளை புதூர் பகுதியில் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பண்ணை வீட்டிலும் மற்றும் அதே பகுதியில் வாணியம்பாடி தனியார் பள்ளி தாளாளர் செந்தில் குமார் என்பவர் பண்ணை வீட்டிலும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி திருடன் கைவரிசை காட்டியிருந்தான்.
வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்த கொள்ளையர்கள் பணம் நகை மற்றும் பொருட்கள் எதுவும் இல்லாததால், காசுபணம் வைக்கக்கூடாத என்றூ எழுதிவிட்டு, சிசிடிவி ஹாட் டிஸ்க் களவாடி சென்றனர்.
இதனால் மேற்படி பங்களாக்களுக்கு ஆய்வாளர் அளவிளான பாதுகாப்பு போடப்பட்டதுஸ்.
இந்நிலையி வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் ஜூன் 23ஆம் தேதி ஆசிரியர் வசீம் அக்ரம் மற்றும் வாணியம்பாடி முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவை சேர்ந்த அதாவுர் ரஹமான் என்பவர் வீட்டிலும் ஜூலை மாதம் 13ஆம் கொள்ளையடித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அபோது அவ்வழியாக வந்த வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நவீத் என்ற இளைஞரை கைது செய்து தீவிர விசாரணை செய்ததில் வாணியம்பாடியில் 2 வீடுகளில் தங்க நகையையும் மற்றும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பள்ளி தாளாளர் செந்தில் குமார் ஆகியோர் பண்ணை வீடுகளிலும் கொள்ளையடிக்க முயன்ப்றதை ஒப்புக்கொண்டார்.
மேலும், வாணியம்பாடியில் முஸ்லிம்பூர் பகுதியில் வீட்டுக்குள் நுழைய முடியாதபடி சுற்றுசுவர் இருந்ததால் மேல் மாடியில் சென்று வீட்டிற்குள் நுழைய கம்பியின் வளைத்து ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனை கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்தியதாக திருடன் நவீத் தெரிவித்ததை கேட்ட காவல்துறையினர் அதிர்ந்து போயினர்