சென்னை : கடவுள் உள்ளமே ! கருணை இல்லமே ! நம் வாழ்க்கையில் தாங்க முடியாதது மற்றும் தவிர்க்க முடியாததும் இரண்டு. ஒன்று பசி, இரண்டாவது தாகம்.
தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது ஞாயிறு முழு ஊரடங்கில், கொரானோ வைரஸ் போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருக்க, பொது நலத்தோடு, முதியோர் இல்லவாசிகளுக்கு, முககவசங்கள் மற்றும் சுவையான மதிய உணவை, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், ஐ.பி.எஸ் அதிகாரி தன் திருக்கரங்களால் வழங்கினார். சென்னையில் நேற்று பரவலாக மழை பொழிந்து கொண்டிருந்த வேளையிலும், கருணை உள்ளத்தோடு கலந்து கொண்டு முதியோர்களை நலம் விசாரித்தார்.
திரு.ஹரி கிரண் பிரசாத், ஐ.பி.எஸ், இவர் 2016 ஆண்டு தேர்ச்சி பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர் முதல் பணியாக நெல்லை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணி அமர்த்தப்பட்டார். அவரின் சிறப்பான பணியை ஊக்குவிக்கும் வகையில், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை பெருநகர தி.நகர் காவல் துணை ஆணையராக நியமித்து தமிழக அரசு கடந்த 10 ஆம் தேதி உத்தரவிட்டது. நெல்லை வள்ளியூர் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் நியமித்த சிறிது காலத்தில், அப்பகுதி மக்களின் அன்பை பெற்றார். பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்றவர்.
தியாகராய நகர் அல்லது தி.நகர் என்பது சென்னையின் மிக முக்கியமான மற்றும் பெரிய பகுதி. இது ஒரு முக்கியமான வணிகப்பகுதி. நகரின் மையத்தில் அமைந்துள்ளது. தற்போது சாவல்கள் நிறைந்த பகுதியான சென்னை தி.நகர் பகுதி காவல் பணியை ஏற்றுள்ளார்.
தி.நகர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில், அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம், மாம்பலம் காவல் நிலையம், வடபழனி காவல் நிலையம், விருகம்பாக்கம் காவல் நிலையம், அசோக் நகர் காவல் நிலையம், கேகே நகர் காவல் நிலையம், எம்ஜிஆர் நகர் காவல் நிலையம், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையம், தேனாம்பேட்டை காவல் நிலையம், தியாகராய நகர் காவல் அனைத்து மகளிர் காவல் நிலையம், சௌந்தர பாண்டியனார் அங்காடி பாண்டி பஜார் காவல் நிலையம், வளசரவாக்கம் காவல் நிலையம், கோடம்பாக்கம் காவல் நிலையம், ராயாலா நகர் காவல் நிலையம், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய 15 காவல் நிலையங்கள் இவரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.
போரூர் ஆலப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில், உள்ள முதியவர்களுக்கு, உணவு மற்றும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த சிறப்பு அழைப்பாளர், தி.நகர் காவல் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத், அவர்கள் மற்றும் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து அன்னையர்கள் இடமும் நலம் விசாரித்து, உணவும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்கள்.
வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்கள், நோய் தொற்று காரணமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே, காவல் பணி மட்டுமல்லாது, பல்வேறு சமூக நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.
முகக் கவசங்கள், லைசால், ஹார்பிக், பினாயில் மற்றும் சனிடைசர் உள்ளிட்ட தூய்மைப்படுத்தும் பொருட்கள் வழங்கப்பட்டது.