சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரம் 1வது தெருவைச் சேர்ந்த சரவணன் அவரது உறவினரான ஆறுமுகம் என்பவரை கடந்த 17.04.2018 அன்று கொலை செய்தது சம்பந்தமாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 30.07.2021 மாண்புமிகு நீதிபதி குற்றவாளி சரவணனை மேற்படி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி அவருக்கு ஆயுள் தண்டனையும் 5,500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த், திருமதி. தேவகி தற்போதைய வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுந்தரமகாலிங்கம் மற்றும், இவ்வழக்கை நீதிமன்ற விசாரணையில் சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி விசாரணைக்கு ஏதுவாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர் HC 1442, திரு.கலையரசு ஆகியோரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்கள்.