விருதுநகர் : கடந்த 22.01.2013 அன்று A. துலுக்கபட்டியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மாரனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர்.
இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 11.11.2019 அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள், குற்றவாளி செல்லமுத்துக்கு 302 IPC பிரிவு கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதமும், அபராதம் தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும், 324 IPC பிரிவின் கீழ் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும், அபராதம் தொகையை செலுத்த தவறினால் மேலும் இரண்டு மாத சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த, காவல் ஆய்வாளர் திரு. P.பார்த்திபன் அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திரு.ராஜா அவர்கள் மற்றும் மாரனேரி காவல்துறையினரையும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.